Published on 19/10/2019 | Edited on 21/10/2019
மோடி-ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. மொடி-ஜின்பிங் சந்திப்பு நடைபெற்ற அடுத்த நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வெண்ணெய் உருண்டை அருகில் சந்தித்ததால் இனி வெண்ணெய் உருண்டையும் கண்டன வரம்புக்குள் வருவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. இந்தியர்கள் வெண்ணெய் உருண்டையை காண ரூ.40, வெளிநாட்டவர்கள் அதை காண ரூ.600 என்று தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து வெண்ணெய் உருண்டையை காண கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.