Skip to main content

முழு அளவு தண்ணீரை கொடுத்தால் நாங்கள் வெட்டிய ஏரி குளங்களை நிரப்பலாம்.. அமைச்சர்களை சந்தித்த கைஃபா குழுவினர்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 

 கல்லணைக் கால்வாயிலிருந்து கடைமடைப் பகுதிகளான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கறம்பக்குடி, பேராவூரணி, ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாக்களின் ஆற்றுப் பாசனத்திற்கு நீர்சுமந்து வருவது புதுப்பட்டிணம் வாய்க்கால் (GA Canal). இதன் முழு கொள்ளளவான 4000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அதனால் நெல் விவசாயம் பொய்த்து தென்னை போன்ற மர விவசாயம் வந்தாலும் கஜா புயலில் அதுவும் போனது. ஒவ்வொரு ஆண்டும் அரிதாகவே காவிரியில் தண்ணீர் வருகிறது. அப்படி வரும்போதாதவது தேவையான வழக்கமாக கொடுக்க வேண்டிய 4000 கன அடி நீர் அளிக்காமல், இதுவரை 1500, 1700 கன அடிகள் என நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால் எடைமடை பாசன விவசாயிகளுக்கு வழக்கம் போல எந்த பயனும் இல்லாமல் போகிறது.

 

k

 

தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதி போன்ற நீர்ப்பிரிப்புப் பகுதிகளில் 'மாற்று முறை' (turn system) செயல்படுத்தப் படுகின்றன. இந்த முறையால் பாசனப் பகுதிகளுக்கு வரும் நீரானது ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் சேமிப்படுவதற்கான சாத்தியம் கடந்த காலங்களில் அரிதாகிப்போனது. மேலும் பெரும்பாலான நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் கிடந்ததாலும் எப்போதாவது வந்த சொற்ப நீரும் இந்த நீர்நிலைகளில் சேமிக்கப்படாமலேயே கடந்து போனது. கடந்து போகும் நீரும் கடைசியில் உள்ள மும்பாலை ஏரியில் நிரைகிறதா என்றால் அதுவும் இல்லை. அவ்வளவு தூரம் பயணிக்கவே தண்ணீர் பத்தாது.  

 

ந்த நிலையில் எப்படியும் இந்த வருடம் கல்லணை தண்ணீரைக் கொண்டு ஏரி, குளம், குட்டைகளை நிரப்பி நிலத்தடி நீரை சேமித்துவிடுவது என்று கடைமடைப் பகுதிகளில் கைஃபா, அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு, உள்ளிட்ட அமைப்புகளும், அந்தந்த கிராமங்களில் உள்ள இளைஞர்களும்,  தன்னார்வலர்களும் சொந்த செலவிலும் நன்கொடைகள் பெற்றும் பரவலாக நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத்  தொடங்கி நடத்தி வருகின்றனர். தூர்வாரப்படும் குளங்களின் கரைகளை மறுபடியும் உடைந்து போகாமல் இருக்க பனை, மற்றும் பல மரங்களையும், வெட்டிவேர்களையும் நடவும் செய்து வருகின்றனர்.  மற்றொரு பக்கம் தமிழக அரசு பல வருடங்களாக கவணிக்காமல் கிடந்த பொதுப்பணித்துறை ஏரி, குளங்களை குடிமராமத்து மூலம் சீரமைப்புப் பணிகளை செய்து வருகிறது.

 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெற்துள்ளதால் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் தண்ணீரை மேட்டூரில் இருந்து  திறந்துவிடப் பட்டிருக்கும் நிலையில், கல்லணையில் முழுமையாக தண்ணீரை திறந்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு கடைமடைப் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளை முழுக் கொள்ளளவிற்கு நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்கிறது என்று விவசாயிகளும், சொந்த செலவில் நீர்நிலைகளை சீரமைத்த இளைஞர்கள் ஆசை கொண்டனர்.


ஆனால், (புதுப்பட்டிணம் வாயக்காலில்) கல்லணை கால்வாயில் குறைவாக திறக்கப்படும் தண்ணீரால் இந்த அற்புதமான வாய்ப்பு இந்த ஆண்டும் கை நழுவிப் போய்விடுமோ என்று அச்சம் கொண்டுள்ளனர். விவசாயிகளும்,  கைஃபா விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வலர்களும்,  

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு கைஃபா குழுவினர் திருச்சி கல்லணை சென்று பார்வையிட்டு வெளியிட்ட வீடியோ அரசு அதிகாரிகள், விவசாய ஆர்வலர்கள் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்தனை தகவல்களையும் வேண்டுகோளையும் நேரடியாக தமிழக அமைச்சர்களிடம் மனுவாக அளியுங்கள் என வழிகாட்டிய நண்பர் மதன் கார்த்திகேயன் வழிகாட்ட, உரிய அமைச்சர்களின் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

 

     அதன் பிறகு இன்று இன்று (26/08/19)  கைஃபா சங்கப் பிரதிநிதிகள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களைச் தலைமைச் செயலகத்தில் சந்தித்து எங்களுக்கு கொடுக்க வேண்டிய முழு அளவு 4 ஆயிரம் கன அடி அந்த நீரை முழுமையாக கொடுத்தால் கடைமடைப் பகுதி முழு வளர்ச்சியடையும், விவசாயம் செழிக்கும். ஆனால் தற்போது வரை 1700 கனஅடி தண்ணீரே திறக்கப்படுவதால் பிரதான கால்வாயில் மட்டும் போகிறது. பாசனத்திற்கோ, சேமிப்பு ஏரிகளுக்கோ தண்ணீரை கொண்டு செல்ல முடியவில்லை என்று மனு அளித்தனர். 


அதே போல அடுத்ததாக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவையும் சந்தித்து மனு அளித்தனர்.  தொடர்ந்து முதல்வரின் மக்கள் தொடர்பாளர் மூலம் 'முதல்வரின் தனிப்பிரிவு'க்கும் மனு அளித்தனர்.

 

கைஃபா குழுவினரை சந்தித்த அமைச்சர்கள், உரிய துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக ஆவன செய்யுமாறு உறுதியளித்ததுடன் கைஃபா உள்ளிட்ட நீர்நிலை சீரமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து தன்னார்வ குழுவினருக்கும்  பணிகளுக்கான பாராட்டுக்களையும் தெரிவித்தனர்!


    இந்த மனு என்பது ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளின் கோரிக்கை என்பதை அமைச்சர்கள் உணர்ந்து முழு அளவு தண்ணீரை திறந்து விட்டால் டெல்டா வளர்ச்சியடையும், நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும். நடவடிக்கை தாமதமாகும் ஒவ்வொரு நாளும் தண்ணீர் வீணாகும், கடைமடை வழக்கம் போல வறட்சியாகும்.

சார்ந்த செய்திகள்