கடந்த சில மாதங்களாக பெண்கள், குழந்தைகளுக்கான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பயணியர் நிழற்குடையில் பையில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட ஆண் குழந்தை கூட 15 வயது சிறுமிக்கு பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் பெண் குழந்தைகளுக்கான வன்முறை அதிகரிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில்தான் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை (4 ம் வகுப்பில் இருந்து 5 ம் வகுப்பு செல்லும் மாணவி) அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததால் காயம் ஏற்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருததுவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவனை பெற்றோரிடம் போலிசார் ஒப்படைத்துள்ளனர்.
செல்போன்களில் கண்ட கண்ட படங்களை பார்த்து சிறுவர்கள் கூட சீரழந்து போகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும் இல்லையென்றால் இது போன்ற குற்றச்சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள்.