Skip to main content

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

Published on 09/05/2018 | Edited on 09/05/2018
n;c


பணிநாட்களை குறைத்ததை கண்டித்தும், தெரியாத பணியினை வழங்குவதை கண்டித்தும் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1A வில் கடந்த 20 ஆண்டுகளாக  பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிளார்களின் வேலை நாட்களை குறைத்ததை கண்டித்தும், அவர்கள் 20 ஆண்டுகளாக செய்து வந்த பணியினை நிறுத்தி தெரியாத வேறு புதிய பணிகள் வழங்குவதை எதிர்த்தும் ஒப்பந்த தொழிளார்கள் நெய்வேலி சுரங்கம் 1A செல்லும் சாலையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

nlc


மேலும் சாலையில் அமர்ந்து பணிக்கு செல்லும் தொழிலாளர்களை பணிக்கு செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த பணியினை சுரங்கம் 1A பகுதியிலேயே,  முழு பணிநாட்களுடன் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.  இதனிடையே அவர்களுக்கு ஆதரவாக அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்