Published on 18/02/2019 | Edited on 18/02/2019
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாளாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்
இன்று கிரண்பேடி மற்றும் நாராயணசாமி தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புக்கொண்டார். ஓய்வூதியம், இலவச, அரிசி காவல்துறையில் பணியாளர் நியமனம் ஆகிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார் கிரண்பேடி. இதனால் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் நடத்திவந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.