Skip to main content

ஆக.16-ல் விவசாயிகள் போராட்டத்தில் இ.யூ.முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்பு

Published on 07/08/2017 | Edited on 07/08/2017

ஆக.16-ல் விவசாயிகள் போராட்டத்தில் 
இ.யூ.முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்பு


’’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வறட்சி வங்கிக்கடன் தொல்லை போன்ற இடர்பாடுகளால் தமிழக விவசாயிகள் கடும் இன்னல் களை அனுபவித்து வருகி றார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. 

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்ற உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு தடை பெற்று இருக்கிறது. ஆக, இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றன. 

எனவே, விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள் ளுபடி செய்தல், காவிரி மேலா ண்மை வாரியம் அமைத்தல், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கொள் முதல் விலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 16-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகர ங்களிலும் விவசாயிகள் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடத்து கின்றனர். 

எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வேலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பி னருமான எச். அப்துல் பாஸித் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை  துவக்கி வைக்கிறார். ’’

சார்ந்த செய்திகள்