விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் பகுதியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தீவிரமாக பிரச்சாரம் செய்து வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது சோழாம்பூண்டியைச் சேர்ந்த தொகுதி மக்களை சந்தித்து வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.
அதன் பின் பொதுமக்கள் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த புகழேந்தி சட்டமன்றதத்தில் உரையாற்றும்போது தனது தொகுதிக்குட்பட்ட சோழனூர், சோழாம்பூண்டி பகுதிக்கு பகுதிநேர ரேஷன்கடை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பின்னர் அவர் காலமானதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் பிரச்சாரத்திற்கு வந்தபோது இப்பகுதி மக்களிடம் அவர்கள் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு பொதுமக்களின் கோரிக்கையான பகுதிநேர ரேஷன்கடை, பொது கழிப்பறை வசதி, பேருந்து நிழற்குடை வசதி, வேண்டுமென கேட்டுள்ளனர். அவரும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
அவர் வாக்குறுதி அளித்தபடி பகுதி நேர ரேஷன் கடை உட்பட அனைத்து கோரிக்கைகளும் இடைத்தேர்தல் முடிந்தபின்பு உடனடியாக நிறை வேற்றப்படும். அதுபோல் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நூறு நாள் வேலை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து தான் 400 பேருக்கு 300 ரூபாய் சம்பளத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள். நாகராஜன், பிலால் உசேன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன், மாவட்ட துணைச் சேர்மன் விஜயன், திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், திண்டுக்கல் பகுதி செயலாளர்களான கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர் அக்கு, தெற்கு பகுதி செயலாளர் சந்திர சேகர், கவுன்சிலர் ஜான் பீட்டர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.