நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பிரிஜ்லால் எம்பி தலைமையில் 8 எம்பிக்கள் குழுவினர் வியாழக்கிழமை (இன்று) காலை சிதம்பரம் வருகை தந்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த எம்பிக்கள் குழுவினரை கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உதவி ஆட்சியர் ராஷ்மி ராணி ஆகியோர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், கோயில் வழக்குரைஞர் சந்திரசேகர் மற்றும் தீட்சிதர்கள், எம்பிக்கள் குழுவினரை வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கனக சபையில் வீற்றிருந்த சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானே தரிசித்தனர் அவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்து பிரசாதத்தை பொது தீட்சிதர்கள் வழங்கினர் .
சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அ அருண்தம்புராஜ்,. எஸ்பி.ராஜாராம் ஆகியோர் கோயிலுக்கு வெளியே உள்ள பகுதிகளின் பேரிடர் மேலாண்மை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் எம்பிக்கள் குழுவிடம் விளக்கினர். இதையடுத்து சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு எம்பிக்கள் குழுவினர் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.