ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தினர் பரங்கிப்பேட்டை பகுதி பொதுமக்களிடையே துண்டறிக்கை வழங்கினர்.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y_Hp0EL3tXOiSGMmlYUvY2uUzbbSDlC5i9G4G-wo5bA/1559152080/sites/default/files/inline-images/parankipet.jpg)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தினர் அந்த இயக்கத்தின் நிறுவனர் தலைவர் லெனின் தலைமையில் ஜூன் 12 ல் நடைபெறவுள்ள ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிப்புத் திட்டங்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கையை வழங்கினர்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்கசண்முகசுந்தரம், ஊடகவியலாளர் அய்யநாதன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், செந்தில் மற்றும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். பரங்கிப்பேட்டை, சின்னூர் வடக்கு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களில் துண்டறிக்கையை வழங்கினர்.