Published on 01/08/2018 | Edited on 27/08/2018
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.
இதில் முருகபக்தர்கள் 32 நாட்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசு, தங்கத்திலானதாலிகள், செயின், மோதிரம், வெள்ளியில் ஆன வேல்கள், கால்பாதங்கள், வெளிநாட்டு கரன்சிகள், பித்தளை வேல்கள், தகரவேல்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு முருகனின் உண்டியல் காணிக்கையை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் பழனி மலையில் எண்ணப்பட்டது.
அதில் இந்த 34 நாட்களில் மட்டும் 2 கோடி ரூபாயை முருக பக்தர்கள் முருகனுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள். அதோடு தங்கம், வெள்ளி என பல லட்சம் பெருமான காணிக்கையும் குவிந்து இருந்தது.