Skip to main content

பழனி கஸ்தூரி யானைக்கு கரோனாஆய்வு!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

பழனி கோவில் யானை கஸ்தூரிக்கு கரோனா பரவாமல் இருக்க வனத்துறை மற்றும் கால் நடை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

 

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 44 வயதான கஸ்தூரி, யானை பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கோவிலில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கஸ்தூரி பங்கேற்கவில்லை.

 

palani murugan temple elephant



தற்பொழுது கரோனா பரவி வருவதால் கஸ்தூரியை வனத்துறையினர் முன்னிலையில் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் யானையை பாதுகாக்க மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.


அதில் கஸ்தூரி யானையின் வழக்கமான செயல்களில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே கோயில் நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு கிருமி பரவாமல் இருக்க வெளியாட்களை யானையின் பக்கத்தில் அனுமதிக்கவே கூடாது.


யானைக்கு நடைப்பயிற்சி, கோடை காலங்களில் கோடை கால குளியல் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. இந்த சோதனையின்போது மாவட்ட வனச்சரக அலுவலர் வித்யா, பழனி வனச்சரகர் விஜயன், கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கோயில் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்