விருதுநகரில் நடைபெற்று வரும் திமுக தென்மண்டல மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையோடும்,கூட்டணியோடும் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஏற்கனவே ஆட்சி அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதோ இப்போது வரலாறு திரும்புகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சொல்லுகிறேன் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியை பெற்று நாம் விரும்புகிற, நாம் சுட்டிக் காட்டுகிற, பெருமையோடு சொல்லுகிறேன் ராகுல் காந்தி தான் பிரதமர்,காங்கிரஸ் தலைமயிலான ஆட்சி மத்தியில் அமையும்.
அந்த வெற்றிப் பயணத்தின் தொடக்கம்தான் இந்தக் கூட்டம். கொலைகார எடப்பாடி ஆட்சிக்கும், பாசிச பாஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கக் கூட்டம் இது. விருதுநகர் மாவட்டம் என்பது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மாவட்டம் என்பதை மறக்க முடியாது மறுக்க முடியாது எனக்கூறினார்.