பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகளுக்கும், 923 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் 659 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 26 பேர் காயமடைந்தனர்.
இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் களத்தில் நின்ற ரமேஷ் என்பவரின் காளைக்கு முதல் பரிசாக காங்கேயம் பசு,கன்றுக்குட்டி வழங்கப்பட்டது. செல்வம் என்பவரின் காளைக்கு 2ஆம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல 16 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பரிசாக மாருதி கார் வழங்கப்பட்டது. 13 காளைகளை பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.