Published on 26/12/2022 | Edited on 26/12/2022

சென்னையில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது மது அருந்திவிட்டு வந்த இளைஞர்கள் சிலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மது போதையில் இருந்த ஒரு இளைஞர் கோபமாகப் பேசும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில், “குடிச்சிட்டு வீட்டுக்கு போறான். அவன இங்கயே புடிச்சு 20 ஆயிரம் கேக்குறாங்க. 20 ஆயிரம் என்ன நியாயம். 150 ரூபா சரக்கு குடிச்சதுக்கு 20 ஆயிரம் பைன் போட்டா என்ன நியாயம்” என ஆக்ரோஷமாக அந்த இளைஞர் பேசுகிறார்.
தொடர்ந்து கூட்டம் கூடியதால் போலீசார் இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.