Published on 03/08/2018 | Edited on 27/08/2018

வரலாற்றில் சிறப்பு மிக்க சமஸ்தானம் புதுக்கோட்டை. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பொன், பொருள், அரண்மனை என்று கஜானாவை அரசுக்கு கொடுத்து புதுக்கோட்டையும் நாட்டுடன் இணைக்கப்பட்டது. அந்த வரலாறுகளை வெளிக்காட்டும் விதமாக பொது அலுவலக சுவர்களில் ஓவியங்களாக தீட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மருத்துவமனை சுவற்றில் இருந்த அந்த ஓவியங்களை அழித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பிலான சீமராஜா திரைப்பட விளம்பரம் எழுதப்பட்டதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் படங்களுடன் சமூக வலைதளம் மூலம் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர், இதன்பின், சில நிமிடங்களில் விளம்பரம் எழுதும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, அழிக்கப்பட்ட ஓவியங்களை மீண்டும் வரைய வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.