ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்(32). கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிவண்ணன் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் . பின்பு அவர் 2022 ஆம் ஆண்டு கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி உயர் ரத்த அழுத்தத்தால் அவர், மூளைச் சாவு அடைந்தார்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் எப்படி தனக்கு பலன் கிடைத்ததோ அதே போல் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மணிவண்ணனின் தயார் மணிவண்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அதே சமயம் உத்திர பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த முகேஷ் குமார் வயது 61 என்பவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மூளைச் சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம் பெறப்பட்டு முகேஷ் குமாருக்கு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி டாக்டர். சரவணன் குழு தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல் அன்று இரவே மீண்டும் ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மற்றொரு நபருக்கு நடைபெற்றது. இது குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் டாக்டர் சரவணன் கூறுகையில், "நோயாளிகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்" என்றார்.