வேலூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தனமாக கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அவருக்கு அஞ்சலி செலுத்த முன் வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எழில் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார். அவரின் மனைவி சத்யா. இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மகள் இந்தாண்டு 12 வது தேர்ச்சி பெற்றுள்ளார். 41 வயதான அவருக்கு அடிக்கடி தலைவலி வந்ததன் காரணமாக கடந்த 17 ஆம் தேதி வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மே 20 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி சத்யாவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய கேட்டபோது அவரது குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர். இதயம், லங்க்ஸ் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கிட்னி சி.எம்.சி, நாராயணி மருத்துவமனைக்கும், லிவர், கண்கள் சி.எம்.சி மருத்துவமனைக்கு தரப்பட்டன.
தமிழ்நாடு அரசின் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடல் உறுப்பு தானம் செய்த அவருக்கு அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது.