விவி மினரல்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் கிளைகள் என 100-கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை பகுதிகளில் முறைகேடாக தாது மணலை எடுத்துள்ளதாகவும், அப்படி தமிழக கடற்கரை பகுதிகளில் எடுக்கப்படும் தாதுமணல் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீகாகுளத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு மணல் ஏற்றி சென்றுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கையிலும் விவி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது விவி நிறுவனத்தின் வெளிநாட்டு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருவதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.