Skip to main content

சாதாரண நெல் வியாபாரியாக இருந்தவர் ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதி! நம்பி  ஓட்டு போட்ட மக்கள்.......

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
road


உச்சி வெயில் மண்டைய உடைக்க ரேசன் அரிசிசையை கோணி பையில் வாங்கிக் கொண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, குண்டும் குழியுமான சாலையில் புலம்பிய படியே சென்றார்கள் சைக்கிளிலும் நடந்தும் சென்ற அப்பாவி மக்கள்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்தாங்கி திடல், கூட நடமங்கை, ஆட்டுக்கால் மடப்புரம் உள்ளிட்ட கிராமத்து வயதான மக்கள் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிற மொழையூர் ரேசன் கடைக்கு போவோரும் வருவோம் தான் அவர்கள். 

 

அந்த வழியாக சென்ற நாம்  அவர்களிடம் விசாரித்தோம், " எங்க தொகுதி எம்.எல்.ஏ அ.தி.மு.க வை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அதோ பக்கத்து பஞ்சாயத்தான ஆனதாண்டவபுரம் தான் அவரு ஊரு. சாதாரன நெல் வியாபாரியா இருந்தாரு. பிறகு கவுன்சிலர் ஆனாரு. முன்னால் அமைச்சர் ஜெயபாலோட ஒட்டிக்கிட்டே இருந்தார். அவரு தனக்கு ஒ.எஸ், மணியனை எதிர்த்து அரசியல் செய்ய ஆள்வேனும்னு எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்தார். எங்களிடம் ஓட்டுக் கேட்கும் போது எப்போதுமே உங்க ஊரு புள்ளத்தான், உங்க நெல் வியாபாரிதான் எப்படி என்னை நம்பி நெல் கடனா கொடுப்பீங்களோ அது மாதிரி எனக்கு ஓட்டு போடுங்க. உங்க நெல்ல வித்துவிட்டு சொன்ன நேரத்தில் பணத்த எப்படி கொடுத்தேனோ அது போல நீங்க போடுற ஓட்டுக்கு விசுவாசமான கடனாளியா இருப்பேன்னார்.

 

ro

 

எம்.எல்.ஏ ஆனதும் ஆளே மாறிட்டார். அவர பார்க்கவே அனுமதிக்க மறுக்கிறார். ரேசன் பொருள் வாங்க 3 கிலோ மீட்டர் இந்த பாடாவதியான ரோட்டுல போக வேண்டியிருக்கு, ரேசனுக்கு போகணும்னா ஒரு நாள் வேளைக்கு போகாம இருக்கனும். ரேசனுக்கு போவதற்காக வீட்டுக்கு வீடு சைக்கிள் வச்சிருக்கோம், போயி வருவதுக்குள்ள டயர் பஞ்சராகிடும். சரியான நேரத்துக்கு ரேசன் வாங்க போகலன்னா அந்த மாதம் ரேசன் இல்லன்னுடுவாங்க. ரோட்ட சரி பண்ணி கொடுங்கன்னு கேட்டு பல முறை அவர் வீட்டு வாசலில் நின்னுட்டோம், உங்க ஊருக்கு ரோடு போட்டா காண்ட்ராக்டருக்கு நஷ்டம் வரும்னு சொல்லுறாரு.

 

பள்ளிக்கூடத்துக்கோ கல்லூரிக்கோ, ஊர் பயணம் போகனும்னா சோழ சக்கர நல்லூர் தான் போகனும். புள்ளைங்க தினசரி போய் வீட்டுக்கு வருவதுக்குள்ள உசுரே கையில் இருக்காது. போன வாரம் ஒரு வயதானவனின் சைக்கிள் டயரில் ஜல்லி குத்தி வெடிச்சி வாய்க்காலில் விழுந்துட்டாரு, 10 நாட்களுக்கு முன்னாடி 7 வகுப்பு படிக்கிற பொண்ணு விழுந்துடுச்சி. எப்போதுதான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ "வேதனையோடு மீண்டும் சைக்கிளில் ஏரி சென்றார்.

 

சாதாரன நெல் வியாபாரியாக இருந்தவர் இன்று ஆயிரம் கோடிக்கு மேல் அதிபதியாகி விட்டார். ஆனால் நம்பி  ஓட்டு போட்ட மக்களை கண்டுக்காமல் விட்டு விட்டார் அவர்கள் 3 கிலோ மீட்டர் செல்லும் போது புலம்பும் புலம்பல் சும்மா விடாது.

சார்ந்த செய்திகள்