Published on 04/08/2022 | Edited on 04/08/2022

பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த 2,057.25 கோடி ரூபாய் நிதியைப் பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகையாக ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம், இப்கோ டோக்கியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பஜாஜ் அலைன்ஸ், எச்டிஎப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.