Published on 21/05/2021 | Edited on 21/05/2021

''கருப்பு பூஞ்சைப் பாதிப்பைக் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை'' என நேற்று செய்தியாளர் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்படியாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், முதற்கட்டமாக கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5,000 மருந்து குப்பிகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனையில் அந்தந்த ஏஜென்சிகள் மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.