Skip to main content

தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

OPS sensational letter to Chief Election Commission

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இபிஎஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார். இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், நாளை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் நிலவுகிறது.

 

தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அதில், 'பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்துள்ளனர் எனவும், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல். அதோடு மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச் செயலாளர் தேர்தல் விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்