Skip to main content

ஓ.பி.எஸ் பங்கேற்கும் அரசு விழாவை புறக்கணிப்பேன்! திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் பேட்டி!!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் காலியாக உள்ள 23 சட்டமன்ற  இடைத்தேர்தலும் நடைபெற்றது.  அதில் ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன் போட்டி போட்டனர்.  இதில் திமுக வேட்பாளரான மகாராஜன்  வெற்றி பெற்றார். அதன் மூலம் அதிமுக கோட்டையாக இருந்த ஆண்டிபட்டி தொகுதியை திமுக தக்கவைத்தது.

 

d

 

 இப்படி அதிமுக கோட்டையை திமுக கைப்பற்றி மூன்று மாதங்கள் ஆகியும் கூட ஆண்டிபட்டி  சட்டமன்ற அலுவலகத்தை ஒப்படைக்காமல்  அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து எம்எல்ஏ மகாராஜன் மற்றும் திமுக  மாவட்டபொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர்  தொடர்ந்து மாவட்ட கலெக்டரை வலியுறுத்தியதின் பேரில் ஆண்டிபட்டி சட்டமன்ற அலுவலகம் சாவியை ஒப்படைத்தனர்.  அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

 

d


 

அதை தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  பத்திரிக்கை யாளர்களிடம் பேசும் போது.... ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 23 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதை துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கேட்டுக் கொண்டிருந்தார்.   ஆண்டிப்பட்டி பகுதியில் வறட்சியை போக்கும் முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டத்தினை நிறைவேற்றக் கோரியும் பேசினேன். 

 

d

 

 மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்காக முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் தண்ணீரை திறக்கும் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.


ஆண்டிப்பட்டி  மக்களின் நீண்டநாள் திட்டமான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எந்த மேடையில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறாரோ? அந்த மேடையில் அவருக்கு நான் தான் முதல் மாலை அணிவிப்பேன்.  ஏனென்றால் மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுக்கான திட்டத்தினை நிறைவேற்றும் வரையில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்  வருவாய்த் துறையினர் அழைத்தாலும் எந்த ஒரு அரசு விழாக்களிலும் நான் பங்கேற்க போவதில்லை.  அரசு விழாக்களையும் புறக்கணிப்பேன்  என்று கூறினார்.

 
இந்த சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் மாவட்டம், ஒன்றியம், நகரம் பொறுப்பிலுள்ள திமுக வினர் பலர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்