Skip to main content

ட்விட்டரில் ஓபிஎஸ்சை கலாய்த்த ராமதாஸ்!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
ட்விட்டரில் ஓபிஎஸ்சை கலாய்த்த ராமதாஸ்!



அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், இரு தினங்களுக்கு முன்பு சிவகாசியில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெற்றுது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர் செல்வம், சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. போட்டோ எடுத்தது ஒரு குற்றமா? திருப்பதியில் மொட்டை போட்டுவிட்டு வெளியில் வந்தேன். அப்போது சேகர் ரெட்டி அங்கு இருந்தார். போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுத்ததை பெரிய குற்றமாகச் சொல்கிறார்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் அந்த கருத்தை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேலியாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில் சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதற்கு.. அடக்கடவுளே..! இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே? என்று நக்கலாக கேலி செய்து பதிவிட்டிருந்தார்.


சார்ந்த செய்திகள்