அரியலூர் மாவட்டத்தில் 37-வது ஆரம்ப சுகாதார நிலையமான தாமரை குளத்தின் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணோலி மூலம் தொடங்கி வைத்தார். அதனை தாமரை குளத்தில் நடந்த விழாவில் அரசு கொரடா தாமரை ராஜேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி ஆராய சுகாதார நிலைய பணிகளை தொடங்கி வைத்தார்.
அரியலூர் ஒன்றியத்தில் கடுகூர், பொய்யாத நல்லூர், விளாங்குடி, பொய்யூர், சுண்டக்குடி, மணக்கால் என 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் கீழப்பழுவூர் , குருவாடி, வெங்கனூர் ஏலாக்குறிச்சி ஆகிய 5 ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
செந்துறை ஒன்றியத்தில் குழுமூர், குமிழியம், மணக்குடையான், பொன்பரப்பி, அங்கனூர், இருப்பிலிகுறிச்சி உட்பட 6 ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தா.பழூர் ஒன்றியத்தில் தா.பழூர், உதயநத்தம், விக்கிரமங்கலம், குணமங்கலம், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான், ஆகிய 6 ஊர்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஆண்டிமடம் வாரியங்காவல், அணிகுறிச்சான், வரதராஜன் பேட்டை, இடையக்குறிச்சி, மருதூர் ஆகிய ஆறு ஊர்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மீன்சுருட்டி, வெட்டியார்வெட்டு, விழாபள்ளம், உட்கோட்டை, வானதிரைபட்டினம், த.சோழங்குறிச்சி டி.பொட்டக்கொல்லை ஆகிய 7 ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
தற்போது அரியலூர் மாவட்டத்தின் 37 வது ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரியலூர் ஒன்றியத்தில் தாமரைக்குளம் கிராமத்தில் அமைத்து உள்ளது. அரியலூர் மாவட்ட கிராமங்களில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகின்றன. இவை இல்லாமல் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை அரசு மருத்துவமனைகள் தனியாக செயல்பட்டு வருகின்றன.