மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கும் வரை மருத்துவப் படிப்புக் கலந்தாய்வு நடத்தக்கூடாது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் ஒதுக்கும் இடங்களில் ஓ.பி.சி.-க்கு 50% இடஒதுக்கீடு தர வேண்டும் என்று கோரினர்.
இந்த வழக்கு இன்று (16/06/2020) விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிபதிகள், "மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு அளிப்பது குறிப்பது ஜூன் 22- ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். மேலும் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.