Skip to main content

மதுரை - போடி அகல ரயில்பாதை பணிக்கு 100 கோடி ஒதுக்கீடு! எம்.பி. ஒபிஆருக்கு பதில் அளித்த மத்திய மந்திரி!!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

பாராளுமன்றத்தில் கேள்வி  நேரத்தின்  போது அதிமுக மக்களவை குழு தலைவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஒ.பி.ரவீந்திரநாத் குமார் எழுப்பிய கேள்வியின் போது... 
 

op ravindranath

 

--LINKS CODE------

 

என்னுடைய  பாராளுமன்ற  தொகுதியான தேனியில் மதுரையில் இருந்து போடி நாயக்கனூர் வரை செல்லும் குட்ஸ் ரயில் தடம் 1924 ல் துவங்கப்பட்டது மதுரையில் இருந்து ரமேஸ்வரத்திற்க்கும் அங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இப்பகுதியில் உற்பத்தியாகும் நறுமணப் பொருட்களை கொண்டு செல்வதற்க்கு இந்த  ரயில் சேவை பயன் படுத்தப்பட்டது. அதன் பின் பயணிகள் ரயில் சேவையாகவும் மாற்றப்பட்டது. சுதந்திர  போராட்டத்தின் போது இந்த ரயில் சேவை முக்கிய பங்காற்றி இருக்கிறது. தேச தந்தை மாகத்மா  காந்தி சுதந்திர போராட்ட வீரர்களுடன் இந்த  ரயிலில் பயணம் செய்து இருக்கிறார். இந்த  மீட்டர் காஜ் ரயில் தடத்தை 304 கோடி மதிப்பில் பிராட் காஜ் ரயில் தடமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது ஆறு தாலுக்காகளை கடந்து சுமார் 25க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் வழியாக பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவ மணைக்கு அருகில் செல்லும் இந்த ரயில் தடம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த  ரயில் தடத்தை பிராட் காஜாக மாற்றும் பணிகளை உடனடியாக நிறைவேற்றினால் தினமும் 10 ஆயிரம் பேர் வீதம் இப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள் இந்த  திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கும் குறித்த  காலத்திற்குள் என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சரிடம் கேள்வி கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சரோ.... 

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில் என்று உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உணர்ச்சி மயமாக இங்கே கூறினார். அதன் பிறகு பலர் ஆட்சிக்கு வந்து போய் விட்டார்கள். இந்த  ரயில் பாதையில் 70 கிலோமீட்டர் ஏற்கனவே பிராட்காஜ் கன்வர்ஷன் செய்யப்பட்டு விட்டது. இந்த  நிதி ஆண்டில் 100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது மீதியுள்ள 127 கிலோமீட்டர்  பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உறுப்பினரின் தொகுதி மக்கள் பயன் அடைவார்கள் என்று பதில் அளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓகே சொன்ன ஓ.பி.ஆர்?; ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024

 

OK said OPR?; OPS supporters are disgruntled

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது.

ஓபிஎஸ் தரப்பு மற்றும் பாஜக இடையே மூன்று முறை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரண்டு இடங்களிலும் தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், இதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து இதற்காக எவ்வளவு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், ஒரே முடிவாக தேர்தலை ஓபிஎஸ் தரப்பு புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு 'அதிமுக தொண்டர்கள் மீட்பு இயக்கம்' என நடத்திவரும் நிலையில் ஒருவேளை பாஜகவின் நிபந்தனைப்படி தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதன் பிறகு அதிமுக மற்றும் இரட்டை இலை ஆகியவைக்கு ஓபிஎஸ் உரிமைகோர முடியாது என்பதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் வதந்தி என ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் எந்த சின்னத்தில் போட்டி என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜே.சி.டி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பது தொடர்பாக தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஓ.பி.ஆரின் இந்த முடிவுக்கு பின், இரவோடு இரவாக சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எஞ்சிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என ஓபிஎஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Next Story

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Supreme Court has stayed the ruling that OP Ravindranath election was void

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பாராளுமன்றத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், “ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்தல், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தல், வங்கிகளில் பெற்ற 10 கோடி ரூபாய் கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, இது குறித்த புகாரை தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்தல், வாக்கு பெட்டியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன” என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டு இருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவிந்திரநாத் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமந்த்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.