Skip to main content

ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்து 

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Ooty hill train derailment accident

உதகையில் மலை ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் பெர்ன் ஹில் என்ற பகுதியில் உதகை மலை ரயில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளம் குறுக்கே தோடர் பழங்குடி இன மக்கள் வளர்த்து வந்த வளர்ப்பு எருமை ஒன்று வந்தது. இதனால் உடனடியாக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவதற்காக பிரேக்கை பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் ரயிலானது கட்டுப்பாட்டை இழந்து எருமை மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே எருமை உயிரிழந்தது. அதே நேரம் ரயிலும் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயிலில் பயணித்த 260 பயணிகளும் எந்த ஒரு சேதமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே துறை போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் மீட்கப்பட்ட பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உதகை ரயில் தடம்புரண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்