Published on 26/06/2023 | Edited on 26/06/2023
கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை என்பது கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்றைய நிலையில் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தக்காளி நேற்று ஒரு கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 20 ரூபாய் விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் 100 முதல் 120 ரூபாய்க்கு தக்காளியானது விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டே நாளில் 60 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பு, அதே நேரம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.