Published on 27/08/2020 | Edited on 27/08/2020

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12ஆம் தேதி பணி நாளாகக் கருதப்படும். உள்ளூர் விடுமுறையால் கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாடுங்கள்’ என கேட்டுக் கொண்டுள்ளார்.