Published on 17/03/2023 | Edited on 17/03/2023

சேலம் அடிமலைப்புதூர் ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (65). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வீராணம் காவல்துறையினர் அர்ஜுனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே அர்ஜுனன் திடீரென்று தலைமறைவானார். கடந்த 7 மாதங்களாக காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், மார்ச் 15ம் தேதி அவர் சொந்த ஊருக்கு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, காவல்துறையினர் விரைந்து சென்று அர்ஜுனனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.