கோடை வெயில் நெருங்கிக்கொண்டுள்ளது. அத்துடன் கோடை விடுமுறையும் நெறுங்கிக்கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வு முடிந்ததும் பணம் படைத்தவர்கள் சிம்லா, குளுமணாலி, இமையமலை என்று படையெடுக்க, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களின் பட்ஜெட் சுற்றுலாதளத்தில் ஒன்றான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியும் ஒன்று.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது என்றாலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அறவே இல்லை. சிறுநீர் கழிக்க கழிப்பிடம் சென்றபோது பத்து ரூபாய் அதிரடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பரிசலில் பயணம் செய்ய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல அங்கு வரும் போதை ஆசாமிகளால் பெண்களுக்கு பாதூகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, காதலர்கள் செய்யும் சில்மிஷங்கள் அங்கு குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இதை கவனித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணத்தில் ஒரு சிறப்பான எண்ணத்தை உருவாக்கும் என்று அங்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.