Published on 08/09/2023 | Edited on 08/09/2023
ராமநாதபுரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் அருகே உள்ள அக்னி தீர்த்த கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியது. இதனால் கடலில் இருந்த பவளப்பாறைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களால் கடலில் விடப்பட்ட சாமி சிலைகள் போன்றவை வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு மட்டுமல்லாது ராமேஸ்வரத்தின் அரிச்சல்முனை, தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓலைக்குடா, அக்னி தீர்த்தம், சங்குமால் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்கியது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அக்னி தீர்த்தத்தில் ஏற்பட்ட கடல் உள்வாங்கலால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்குவது அச்சத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.