Skip to main content

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஈரோட்டில் அறநிலைத்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

h raja

 

பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராசா வை கைது செய்து சட்டப்பூமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோட்டில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்  இன்று மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஹெச்.ராசா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவமரியாதை செய்தும் அநாகரீகமாகவும் பேசியுள்ளார் இதை கண்டித்து இன்று தமிழகம் முழுக்க இன்று ஹெச் ராசாவை கைது செய்யக் கோரி ஆர்பாட்டம் நடத்தினார்கள். 

 

சார்ந்த செய்திகள்