உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.
இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்தது இந்திய அரசு. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு நேற்று ஒரு நாள் மட்டும் 321 ஆகப் பதிவான நிலையில் இன்று 174 ஆகக் குறைந்துள்ளது. ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று ஒரே நாளில் 382 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 1,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.