Skip to main content

'உடல்நிலை சரியில்லை...' - நமீதாவின் கணவர் கடிதம்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

nn

 

கடந்த 30 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற எம்.எஸ்.எம்.இ கவுன்சில் கூட்டத்தில் அதன் மாநிலத் தலைவரான நமீதாவின் கணவர் சவுத்ரி பங்கேற்றார். ஒன்றிய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. சேலத்தைச் சேர்ந்த கோபாலசாமி என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் ஒன்றிய அரசின் முத்திரை மற்றும் தேசியக் கொடியைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக முத்துராமன், துஷ்யன் என்ற இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். எம்.எஸ்.எம்.இ கவுன்சில் தமிழ்நாடு தலைவர் பதவிக்கு 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதில் நமீதாவின் கணவர் சவுத்ரி மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் மஞ்சுநாத் ஆகியோருக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், எம்.எஸ்.எம்.இ மோசடி வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நமீதாவின் கணவர் சவுத்ரி போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உடல்நிலை சரியில்லாததால் விசாரணைக்கு வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்