பள்ளி கல்வியை தரம் உயர்த்தி விட்டோம் தனியார் கல்வி நிறுவனங்களை விட அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் சீர்படுத்தப்படுகிறது. உள்கட்டமைப்புகள் சிறப்புற மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செல்லுமிடமெல்லாம் பள்ளி கல்வித்துறை சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார்.
ஆனால் அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலிருந்து 20 கிலோ மீட்டரில் உள்ளது செண்பக புதூர் நடுப்பாளையம் இங்கு ஒரு தொடக்கப் பள்ளி உள்ளது அவ்வூர் மக்கள் " ஐயா இந்த பள்ளிக்கூடம் 1992ல் கட்டப்பட்டது. பில்டிங் ஸ்டாங்க இருந்தாலும் பெயின்ட் அடிக்காம பாழடைந்த கட்டிடம் போல உள்ளது. மொத்தம் ஐந்து வகுப்புகள் உள்ளது. ஆரம்பத்தில் 100, 200 குழந்தைகள் படித்தார்கள். பள்ளி கட்டிடத்தை பராமரிக்காமல் இப்போது இரண்டே இரண்டு மாணவர்கள் தான் படிக்கிறார்கள். கட்டிடத்தை புரணமைத்து பொழிவு செய்தால் இப்போது கூட ஐம்பது மாணவர்கள் இந்த அரசாங்க பள்ளியில் சேர்க்க நாங்க தயார்" என கல்வி அமைச்சரான செங்கோட்டையனுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் மனு கொடுத்தனர். எந்த பதிலும் இல்லை. அமைச்சரின் சாதனை பேச்சு மைக்கிற்கும் மனுக்கள் குப்பையிலும் என உணர்ந்த அவ்வூர் இளைஞர்கள் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மானவ மாணவியரை அழைத்து நாமே இதை புரணமைத்தால் என்ன என ஆலோசித்தனர். பெயின்ட் பொருட்கள் வாங்க 25 ஆயிரம் ரூபாய் ஊர் மக்களிடம் வசூல் செய்து மாணவர்களே களத்தில் இறங்கினார்கள் இரண்டே நாளில் கட்டிடம் புதுப்பொழிவு பெற்றது. அடுத்து மாணவர்கள் சேர்க்கை இப்போது 50 ஜ தாண்டி விட்டது இந்த மக்கள் பணிய முன்னின்று நடத்தியது கம்யூனிஸ்ட் தோழர்கள் என்பது குறிப்பிடதக்கது.
கல்வி அமைச்சரின் ஊரிலேயே ஒரு அரசுப் பள்ளியை அரசால் புதுப்பிக்க முடியவில்லை. அமைச்சர் செங்கோட்டையனுக்கு சாதனை செம்மல் (?) என்ற மற்றொரு பெயர் நீண்ட காலமாகவே ர.ர.க்களால் அழைக்கப்படுவதுண்டு.