Skip to main content

பேரிடர் மட்டுமல்ல.. தேர்தலிலும் கவனம் பெறும் ஆய்வாளர் ராஜேஸ்வரி!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 

 

அந்தவகையில், சென்னை மந்தைவெளி, ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 93 வயது முதியவர் வாக்களிக்க நடக்க முடியாமல் வந்தார். அந்தசமயம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, உடனடியாக அருகில் இருந்த சர்க்கர நாற்காலியை எடுத்துவரச் சொல்லி முதியவரை அதில் அமர வைத்தார். மேலும், அந்த முதியவர் முகக் கவசம் அணியாததால், அவருக்கு முகக் கவசம் அணிவித்து வாக்குச் சாவடிக்குள் அழைத்து செல்ல உதவி செய்தார். 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திடீரென பெய்த கனமழையில் சாலைகள் வெள்ளக்காடானது. அப்போது சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லறையில் மரங்களை அகற்றும் பணியில் இருந்த இளைஞர் மயக்கமடைந்து விழுந்தார். அவரை உடனடியாக காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி தனது தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு சாலைக்கு ஓடிவந்து ஒரு ஆட்டோவை பிடித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும், அவர் முதலமைச்சர் ஆய்வாளர் ராஜேஸ்வரியை அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்