Skip to main content

''தனித்து நிற்க பயமில்லை'' - தேமுதிக விஜய பிரபாகரன் பேட்டி

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

dmdk

 

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என இயங்க, பரபரப்பாக உள்ளது தமிழக அரசியல் களம். இந்நிலையில், ‘வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கப் பயமில்லை’ என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபிரபாகரன், ''நாங்கள் 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து களம் கண்டிருக்கிறோம். எல்லா ஃபார்முலாவும் நாங்கள் அரசியலில், விஜயகாந்த் தலைமையில் செய்திருக்கிறோம். எனவே தனித்து நிற்கப் பயமில்லை. அதேபோல் கூட்டணி சேர வேண்டும் என்றாலும் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் இது நான் மட்டும் எடுக்கும் முடிவில்லை. விஜயகாந்த் செயற்குழு, பொதுக்குழு கூட்டி அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுத்தான் முடிவெடுப்பார். தனித்து நிற்க அச்சமில்லை ஆனால் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். எனவே அனைத்து நிர்வாகிகளுடன் கூடிப்பேசி முடிவெடுப்போம்,'' என்றார்.   

 

சார்ந்த செய்திகள்