Skip to main content

 வட மாநில தொழிலாளி மயங்கி விழுந்து பலி!

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
Northern state worker fainted and passed away

பிஹார் மாநிலம், வைஷாலி மாவட்டம், சந்தோடி பகுதியை சேர்ந்தவர் பிண்டு மகட்டோ(39). இவர் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான பிண்டு மகட்டோ கடந்த 2 வருடங்களாக சொந்த ஊருக்கும் செல்லவில்லை என தெரிகிறது. தினமும் மது குடித்து வரும் அவர், நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையின் இருசக்கர வாகன நிறுத்தத்திடத்திலேயே படுத்து விட்டார்.

இந்த நிலையில், நேற்று காலையில், தொழிற்சாலை ஓட்டுநர் ஒருவர் அங்கு வந்தபோது பிண்டு மகட்டோ தலைக்குப்புற கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பிண்டு மகட்டோ இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

சார்ந்த செய்திகள்