பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டம், இட்வசிவ் நகரைச் சேர்ந்தவர் சங்கர் மூக்கியா (33). இவரது மனைவி சந்ததேவி. இவர்களுக்கு திருமணம் ஆகி, இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கர் மூக்கியா தனது அண்ணன் மற்றும் தம்பிகள் உடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு ஹரியே வாய்க்கால் மேட்டில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் டபுளிங் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அந்தப் பகுதியில் சங்கர் மூக்கியா குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று சங்கர் மூக்கியா மது அருந்தி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது தம்பிகள் வந்து சமாதானம் செய்துள்ளனர். அப்போது சங்கர் மூக்கியா திடீரென வீட்டுக்குள் சென்று அறை கதவை தாழிட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் மற்றும் தம்பி கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. இதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சங்கர் மூக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.