Skip to main content

அஜித்தின் ‘யங் லுக்’ புகைப்படம்; இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்வு!

Published on 15/12/2024 | Edited on 15/12/2024
Ajith young look photo Director Adhik Ravichandran shared

நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்-பேட்-அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் லைகா தயாரிக்க த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அடுத்த படமாக உருவாகி வரும் குட்-பேட்-அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைபடத்தில் அஜித் பணிபுரிகிற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய அஜித்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனை அஜித் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்