நெல்லை மாவட்டத்தில் தென்காசி பத்திரப்பதிவு மாவட்டத்தின் மாவட்ட பத்திரப்பதிவாளர் மற்றும் தணிக்கை ஆகிய துறைகளின் பொறுப்பில் இருப்பவர் பெண் ஊழியரான கலைச்செல்வம். இவர், நேற்று நவம்பர் 30ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் பிரிவு உபச்சார விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். அன்றைய தினம் காலையில் சென்னையின் பத்திரவுப்பதிவு மற்றும் வணிகவரித்துறை இயக்குநர், கலைச்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து அதற்கான உத்தரவை நேற்றைய தினமே மின்னஞ்சலில் அனுப்பியதோடு, தொலைபேசியிலும் அதை தெரிவித்தார். இதனால் பிரிவு உபச்சார விழா ரத்து செய்யப்பட்டது.
பணி ஓய்வு பெறும் நாளில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியவந்ததால் அந்த துறையின் பணியாளர்கள் நேற்று கலைச்செல்வத்தை பார்க்க வரவில்லையாம். இது தொடர்பாக பத்திரவுப்பதிவு வட்டாரம் சொல்வது என்னவெனில்...பதிவாளர் கலைச்செல்வம் முன்பு அவர் பணியில் இருந்த இடத்தில் லஞ்ச ஒழிப்பு துறையில் குற்றச்சாட்டிற்கான வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. அதன் அடிப்படையிலும், வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார்கள்.
பத்திரவுப்பதிவின் பதிவாளர் மற்றும் தணிக்கை அதிகாரியே ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அந்த துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.