தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால் இறுதிக்கட்ட பிரச்சாரக் களம் சூடுபிடித்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்பொழுது நிறைவுபெற்றது.
பரப்புரை முடிந்ததால் தொகுதியில் வாக்காளர்கள் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பரப்புரை முடிந்த தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. சினிமா தியேட்டர் தொலைக்காட்சி சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் வெளியிடக்கூடாது .சட்டமன்ற தொகுதிக்கு வெளியே இருந்து வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். பிரச்சாரம் முடிந்துள்ளதால் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 40 கம்பெனி துணை ராணுவப்படையினர், 5 ஆயிரம் போலீசார் புதுவையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.