குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த தனியார் குத்தகையை ரத்து செய்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாள் முமுவதும் தண்ணீா் கொட்டும் திற்பரப்பு அருவிக்கு கேரளா மற்றும் தமிழகத்ததின் பல பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தனியார் குத்தகைதாரா் கிறிஸ்டோபா் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் 5 ரூபாய்க்கு பதில் 10 ரூபாயாகவும், 10 ரூபாய் காமிராவுக்கு 25 ரூபாயாகவும், 25 ரூபாய் வீடியோ காமிராவுக்கு 125 ரூபாய் என ரசீது திருத்தி கொடுத்து வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் ரமாதேவி ஆய்வு மேற்கொண்டு அதிக நுழைவு கட்டணம் வசூலிப்பதை கண்டுபிடித்தார். இதை தொடா்ந்து குத்தகைதாரரின் குத்தகையை ரத்து செய்து இன்று முதல் பேரூராட்சி தீா்மானித்த குறைந்த கட்டணத்தை பேரூராட்சி ஊழியா்கள் மூலம் வசூலிக்கபடும் என்று செயல் அலுவலா் ரமாதேவி தெரிவித்துள்ளார். இதை தொடா்ந்து சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.