Skip to main content

'எவ்வளவு மழை பொழிந்தாலும் ரயில் சேவை நிறுத்தப்படாது'-மெட்ரோ உறுதி

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
nn

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கனமழை எதிரொலி காரணமாக மூன்று நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று, நாளை மற்றும் அக்டோபர் 17ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 இரவு மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், பச்சை வழித்தடத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயிலும், நீல வழிதடத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படவுள்ளது. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கூடுதல் சேவையை மெட்ரோ வழங்குவதாகவும், எவ்வளவு மழை பொழிந்தாலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படாது எனவும் மெட்ரோ நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது. ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ள தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழை நீர் தேங்க வாய்ப்புள்ள மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்