Skip to main content

மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை; தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு உதவி- ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

 

Maoist

 

தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை எனவும், வெளி ஆட்களின் நடமாட்டத்தை அறிந்து தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டு வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தெரிவித்து உள்ளார்.

 

கோவையில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.  தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவாமல் இருக்க தமிழக சிறப்பு அதிரடிப்படை மற்றும்  நக்சல் தடுப்பு பிரிவினர்  இணைந்து பணியாற்றி வருவதாகவும். இதற்கு முக்கியப் பங்காற்றி வரும்  மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக கூறினார். வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக  மலைவாழ் மக்களிடம் இருந்து ,தகவல்கள் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக கூறினார்.

 

மேலும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் படிப்பிற்கு தேவையான வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்தார். நக்சல் தடுப்பு நடவடிக்கைக்கு மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பாக உள்ளதாகவும், காவல் துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். குறிப்பாக தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்