ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை -தங்க தமிழ்ச்செல்வன்
இரண்டாவது முறையாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள தங்க. தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
"செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் சபாநாயகர் நேரில் வந்து தனித்தனியாக விளக்கமளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுவரை நோட்டீஸ் தங்களை வந்தடையவில்லை" என்றார். மேலும், எடப்பாடி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், முதலமைச்சரை மாற்றுவது தான் தங்கள் நோக்கம் என்றும், ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
-சுந்தரபாண்டியன்