என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள்
மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!
மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்தும், வேலை நாட்களை 26 நாட்களாக வழங்க கோரி கடந்த 23 நாட்களாக அனைத்து தொழிற்சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை மூலம் நேற்று முன் நாள் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் முன்னிலை வகித்ததாக கூறி அந்தோனிராஜ், பூவராகவன், சங்கர் ஆகியோர் மீது வழக்கு உள்ளதாகவும், அந்த வழக்குகளை முடித்து விட்டு வேலைக்கு வாருங்கள் என நிர்வாகம் கூறி வேலை வழங்க மறுத்தது.
இதனால் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்