Skip to main content

அத்திவரதரும் டோரிமானும்..! கலக்கல் காமினேஷனில் கொலு பொம்மைகள். (படங்கள்)

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

 

ஆண்டுதோறும் நவராத்திரி விழாக்களின்போது வீடுகளில் கொலு அமைத்து வழிபடுவது வழக்கம். 9 நாட்கள் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். சப்த கன்னிகள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், ஆகிய புராணக் கதைகளை விளக்கும் வகையில் பொம்மைகள் அமைக்கப்படுவதோடு. வருடா வருடம் ட்ரெண்டிங்குக்கு ஏற்றார்போல் புது வகையான பொம்மைகளை கொலுவில் வைக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கடந்த 3-ந் தேதி முதல் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. 
 

இங்கு தாவரங்கள், ஊர்வனங்கள், பறவைகள், விலங்குகளின் பொம்மைகள், செட்டியார்-செட்டியம்மை மற்றும் குபேர பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், சங்கீத மூவர் பொம்மைகள், ஞானிகளின் பொம்மைகள், முப்பெரும் தேவிகளின் பொம்மைகள், அஷ்டலட்சுமி அவதாரம், விஷ்ணுவின் தசவாதாரம், நவநரசிம்மர், கைலாச ஈசன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம் என விதவிதமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புது வரவுகளாக அண்மையில் காட்சி அளித்த காஞ்சீபுரம் அத்திவரதர் சயனம் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் கிரிக்கெட் வீரர்கள், ஹட்டோரி, டோரிமான் உள்ளிட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நான்குவகை நவராத்திரிகள் இருப்பதை அறிவீர்களா?

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

4 types of navratri

 

"ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.'

 

மனிதர்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாக இருப்பது பிரபஞ்ச சக்தி. இந்த பிரபஞ்ச சக்திகளுக்கெல்லாம் சக்தியளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. ஆனால் உணரமுடியும். அந்த சக்தியைப் பரிபூரணமாக உணர, உருவமாக அமைத்து வழிபடும்போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன.

 

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்றுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். உலக நன்மைக்காகத் தீமை களை அழித்து நன்மையை வழங்கும் வகையில் பராசக்தி - மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத்தையும் வீட்டிற்கு வரவழைத்து, வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி. அக்காலத்தில் நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்.

 

இந்தியாவில் உணவு, உடை, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும், ஆன்மிகரீதியாக சக்தி வழிபாட்டில் - அதுவும் நவராத்திரி வழிபாட்டில் ஒருமைப்பாடே நிலவுகிறது. நவராத்திரி நாட்களில் சக்தியை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; எதிலும் வெற்றிபெற முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

 

நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையைப் பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது. ஒவ்வொரு வருடமும் நான்கு வித நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.

1. சாரதா நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

2. வசந்த நவராத்திரி

பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.

3. ஆஷாட நவராத்திரி

ஆடி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.

4. சியாமளா நவராத்திரி

தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

 

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் வந்தாலும், புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரி தான் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வழிபடுவதால், இதற்கு சாரதா நவராத்திரி என்று பெயர் ஏற்பட்டது. 

 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துக்கத்தைப் போக்கும் துர்க்கையையும், இரண்டாவது மூன்று நாட்கள் செல்வத்தைப் பொழியும் லட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் ஞானத்தை நல்கும் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம். இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலமே நவராத்திரி. நவராத்திரி நாட்களில் பஞ்சபூதங்களுள் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைத்து வழிபட சகல சுகங்களும், பாக்கியங்களும் தேடிவரும். நவராத்திரி நாட்களில், அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார். அந்தந்த நாளுக்கு என்ன வழிபாடு என்பதையும், அதனால் ஏற்படும் சுபப் பலன்களையும் காணலாம்.

 

 

 

Next Story

ஓ.எம்.ஆரில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Toys without ISI stamp seized at OMR

 

சென்னை ஓ.எம்.ஆர் சாலை பகுதியில் உள்ள பொம்மை கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை இந்திய தர நிர்ணய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பிரபல கடைகளில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில் இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு அங்கிருந்து முத்திரைகள் இல்லாத 817 பொம்மைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதுபோல் அண்மையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பொம்மை கடைகளிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது.